தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல்
தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 கோடியை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் வருகிற 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போது தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
அந்த வகையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோத னையில் ஈடுபடுவது, பொது மக்களுக்கு வேட்பாளர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குகிறார் களா என 24 மணி நேரம் கண்காணித்து வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு மதுபானம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும், பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கவும் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேசம்பட்டி அருகே வாகன சோதனையின் போது காரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 கோடியை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணமின்றி வேனில் பணத்தை எடுத்துச்சென்ற 3 பேரிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story