திமுக வெற்றி: கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு - அமைச்சர் ஜெயக்குமார்


திமுக வெற்றி: கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 5 April 2019 9:11 PM IST (Updated: 5 April 2019 9:11 PM IST)
t-max-icont-min-icon

திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பது கருத்துக்கணிப்பு அல்ல கருத்துத்திணிப்பு.  2016-ல் வெளியான கருத்துக்கணிப்புக்கு மாறாக அதிமுக வெற்றி பெற்றது.

அதிமுகவின் மீது குறை சொல்லியே பிரசாரம் செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின். கிருஷ்ணர் குறித்து தி.க.தலைவர் கி.வீரமணி உதிர்த்த கருத்து தவறானது.

மதநல்லிணக்கம் உள்ள நாட்டில் மதங்கள் குறித்து தவறாக பேசக்கூடாது. தனிநபர் விமர்சனம் முற்றிலும் தடுக்கப்படும் வகையில் தேர்தல் ஆணையம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story