மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த 16 வயது சிறுமி


மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த 16 வயது சிறுமி
x
தினத்தந்தி 6 April 2019 12:30 AM IST (Updated: 5 April 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த 16 வயது சிறுமி

திரு.வி.க.நகர்,

சென்னை மருத்துவமனையில், பெற்றோரை இழந்த 16 வயது சிறுமி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை கர்ப்பமாக்கியதாக வாலிபரை கைது செய்யவா? என போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர்.

வடசென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 16 வயது சிறுமி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் 22 வயது வாலிபர் உடன் இருந்து கவனித்து வருகிறார். சிறுமியின் வயதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சிறுமியை கர்ப்பமாக்கியதாக அந்த வாலிபரை கைது செய்ய போலீசார், மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, தாய்–தந்தையை இழந்து அனாதையான தனக்கு ஆதரவு கொடுக்கும் நல்ல எண்ணத்திலேயே அந்த வாலிபர் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது குழந்தை பிறக்க உள்ள நிலையில் மருத்துவமனையில் இரவு–பகலாக தன்னை நிழல்போல் உடன் இருந்து கவனித்து வருவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கியதாக அந்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தால், மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டு உள்ள சிறுமியை உடன் இருந்து கவனிக்கவும், அவருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

எனவே தற்போதை சூழ்நிலையில் அந்த வாலிபரை சட்டப்படி கைது செய்யவா? என போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர். இந்த விவகாரத்தில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என உயர் அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

Next Story