சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என்று பெயர் மாற்றம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு


சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என்று பெயர் மாற்றம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 6 April 2019 12:04 PM IST (Updated: 6 April 2019 12:04 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் பிரதமர் மோடி பங்கேற்ற மக்களவைத் தேர்தல் பொதுக்கூட்டத்தில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

இதனை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என்ற பெயர் வைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது."


Next Story