வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம் - ப. சிதம்பரம்


வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம் - ப. சிதம்பரம்
x
தினத்தந்தி 8 April 2019 12:35 AM IST (Updated: 8 April 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை அதிகாரிகளை வரவேற்க காத்திருப்பதாக ப. சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #P.Chidambaram

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம் !

எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும்  தெரிந்த செய்திதான்.

இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள்” என அதில் தெரிவித்துள்ளார்.

Next Story