தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 8 April 2019 2:53 PM IST (Updated: 8 April 2019 2:53 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெயில் இயல்பை விட 3-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன்  காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை  27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story