தேர்தல் செய்திகள்

விரைவில் பிரசாரம் செய்வேன்-விஜயகாந்த் பேட்டி + "||" + I will soon commence - interview with Vijayakanth

விரைவில் பிரசாரம் செய்வேன்-விஜயகாந்த் பேட்டி

விரைவில் பிரசாரம் செய்வேன்-விஜயகாந்த் பேட்டி
தேமுதிகவினர் நன்றாக உழைத்து, 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என விஜயகாந்த் கூறி உள்ளார்.
சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல மாதங்களுக்கு பிறகு பேட்டியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் சில காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

இந்நிலையில் மக்களவை தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில், இதுவரை விஜயகாந்த் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளாததும், பொதுவெளியில் பேசாததும் அக்கட்சி தொண்டா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல மாதங்களுக்கு பின்னர் விஜயகாந்த் பேசிய வீடியோ அவரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், எனது உடல்நிலை மிகவும் நலமாக உள்ளது. கூடிய விரைவில் நான் பிரசாரத்தில் கலந்து கொள்வேன். மருத்துவரின் அறிவுரையின் படி தொடா்ந்து பிரசாரங்களில் பங்கேற்பேன். தமிழகத்தில் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையேயான போட்டி என்பது, தா்மத்திற்கும், அதா்மத்திற்கும் இடையே நடைபெறும் போட்டி. இதில் தா்மம் தான் வெற்றி பெறும். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி என்று தான் அா்த்தம். மோடி நல்லவா், அவா் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

விஜயகாந்தின் பேட்டியால் தேமுதிக தொண்டா்கள் உற்சாகம் அடைந்துள்ளனா்.