தமிழக மக்களிடம் ‘சூப்பர் ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது’ நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேட்டி


தமிழக மக்களிடம் ‘சூப்பர் ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது’ நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 11 April 2019 1:31 AM IST (Updated: 11 April 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் குடியுரிமை தேசிய கட்சி சார்பில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டியிடுகிறார்.

அடையாறு, 

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் குடியுரிமை தேசிய கட்சி சார்பில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டியிடுகிறார். நேற்று அவர், சென்னை மாநகராட்சி அடையாறு மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வாகன பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியதாவது:-

தேர்தலுக்காக மக்களை நேரடியாக சந்திக்கும் பிரசாரத்தை நாளை(இன்று) முதல் தொடங்க இருக்கிறேன். நான் மக்களையும், கடவுளையும் நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன். அதிகமான வாக்குகள் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். என்னை பிரசாரம் செய்யவிடாமல் யாரும் தடுக்கவில்லை. எங்கள் கட்சி தலைவர் வந்த பிறகு பிரசாரம் தொடங்கலாம் என்று இருந்தேன். நடிகர் ரஜினிகாந்த், பா.ஜனதா தேர்தல் அறிக்கையை பாராட்டி தனது சொந்த கருத்தை கூறியுள்ளார். ஆதரவு கொடுப்பதும், கொடுக்காததும் அவரது விருப்பம். அரசியலுக்கு வர அவருக்கு பயம் இல்லை. நல்ல கருத்துகளை அவர் வெளிப்படுத்துகிறார். சொல்லாமலேயே நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன், ரஜினிகாந்தும் விரைவில் வருவார். தமிழக மக்களிடம் சூப்பர் ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் (எனக்கும்) எதிர்பார்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story