தலைமை தேர்தல் அதிகாரியுடன் அசுதோஷ் சுக்லா சந்திப்பு
தமிழகத்தில் தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஷ் சுக்லாவை இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஷ் சுக்லாவை இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து அவரது நியமனம் தொடர்பான அரசாணையை தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்கு நேற்று அசுதோஷ் சுக்லா வந்தார். அங்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்துப் பேசினார். 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.
பின்னர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோரையும் அசுதோஷ் சுக்லா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Related Tags :
Next Story