பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் மகள் வாக்கு சேகரிப்பு
பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் மகள் வாக்கு சேகரிப்பு
சென்னை,
அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். தன்னுடைய தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டாலும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்தும் அவ்வப்போது பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் மட்டுமல்லாது, அவருடைய மனைவி டாக்டர் சவுமியா அன்புமணியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மத்திய சென்னை தொகுதி பா.ம.க. வேட்பாளர் சாம்பாலுக்கு ஆதரவு கேட்டு டாக்டர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ராவும் பிரசார களத்தில் இறங்கியுள்ளார்.
அவருடன், டாக்டர் அன்புமணி ராமதாசின் அக்காள் மருமகள்கள் டாக்டர்கள் டீனா, ஐஸ்வர்யா ஆகியோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கோடம்பாக்கம் பகுதிகளில் நேற்று மாலை ஓட்டு கேட்டனர். அந்த பகுதியில் நடந்தே சென்று வீடு, வீடாகவும், கடை, கடையாகவும் ஏறி வாக்கு சேகரித்தனர்.
Related Tags :
Next Story