‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை சென்னையில் தொடங்கியது


‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை சென்னையில் தொடங்கியது
x
தினத்தந்தி 13 April 2019 3:00 AM IST (Updated: 13 April 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை சென்னை ராயப்பேட்டையில் நேற்று தொடங்கியது.

சென்னை,

‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது.

கண்காட்சியை சத்யா நிறுவனத்தின் தலைவர் ஜான்சன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜான்சனின் மகன் ஜாக்சன், ‘கேரியர்’ நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் வெங்கடேஷ், அபி இம்போர்ட்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லட்சுமணன், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் தேசிய தலைமை அதிகாரி கமலேஷ்வரன், மண்டல மேலாளர் ஜிந்தன் சனா, பிராந்திய மேலாளர் இளவேனில் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி-விற்பனை, நாளையுடன்(ஞாயிற்றுக் கிழமை) நிறைவு பெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

வீட்டு உபயோக பொருட்கள்

கண்காட்சியில் கோத்ரேஜ், சாம்சங், கேரியர், எல்.ஜி., சோனி, புளூ ஸ்டார், வோல்டாஸ், டைகின், ஹிட்டாசி, ஹையர், டி.சி.எல்., பிரீத்தி உள்பட முன்னணி நிறுவனங்களின் வீட்டு உபயோக பொருட்கள் இடம்பெற்று இருக்கின்றன.

சுமார் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் வகைகள், செல்போன் வகைகள், உணவு பொருட்கள் என அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கும் வகையில் ஒருங்கே அமைக்கப்பட்டுள்ளன.

எல்.இ.டி. டி.வி., ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், பர்னிச்சர் வகைகள் உள்பட ஏராளமான பொருட்கள் இங்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

குளு குளு ஏ.சி. வகைகள்

கோடைகாலத்தை முன்னிட்டு, குளு குளு ஏ.சி. வகைகள் சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. முன்னணி நிறுவனங்களின் 300-க்கும் மேற்பட்ட ஏ.சி. மாடல்கள் கண்காட்சியில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன.

வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாடல்களின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக வந்து தெரிந்து கொண்டு, தங்களுக்கு பிடித்தமான ஏ.சி.யை அதிரடி சலுகை விலையிலும், எளிய தவணை முறை வசதியிலும் எடுத்து செல்லலாம்.

ஒவ்வொரு நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு ஏ.சி.யின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் சிறப்பாக எடுத்து கூறுகின்றனர். ஏ.சி.க்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் ஆபரும் இருக்கிறது. வெறும் ரூ.1 மட்டும் செலுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான ஏ.சி.யை வாங்கும் வசதியும் உள்ளது.

பர்னிச்சர்கள்

‘ஏ.சி. வாங்குங்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டத்தை காணுங்கள்’ என்ற சுவாரஸ்யமான திட்டத்தின் மூலம் சில குறிப்பிட்ட மாடல் ஏ.சி. வாங்கினால், அதனுடன் கூடுதலாக ரூ.4 ஆயிரத்து 999 கொடுத்து 32 அங்குலம் எல்.இ.டி. டி.வி.யை வாங்கி செல்லலாம்.

பஜாஜ் நிறுவனத்தின் பைனான்ஸ் மூலம் எந்த ஏ.சி. வாங்கினாலும் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான எந்தவித நிபந்தனையற்ற பரிசு கூப்பன் வழங்கப்படும் என்று சத்யா நிறுவனத்தின் தலைவர் ஜான்சன் தெரிவித்தார். பர்னிச்சர் வகைகளை பொறுத்தவரையில் ஏராளமான மாடல்களில் கட்டில்கள், ஷோபாக்கள், டைனிங் டேபிள்கள், மெத்தைகள் என கண்காட்சியில் அலங்கரிக்கின்றன.

உயர்தர தேக்கு மரத்திலான இந்தோனேஷியா கட்டில், லெதர் ரெக்லைனர்கள், தேக்கு மரத்திலான டைனிங் டேபிள்கள், ஜெய்ப்பூர் ஷோபாக்கள் என வீடு மற்றும் அலுவலக உபயோகத்துக்கு தேவையான பர்னிச்சர் வகைகள் மிகக்குறைந்த விலையில், உயர்ரக தரத்தில், எளிய தவணை முறையில் 0 சதவீதம் வட்டியுடன் கிடைக்கும் என்றும், அனைத்து வகையான மெத்தைகள் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்றும் அபி இம்போர்ட்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லட்சுமணன் தெரிவித்தார்.

செல்போன்கள்

இதுமட்டுமில்லாமல் பூர்விகா நிறுவனத்தின் சார்பில் அனைத்து வகையான செல்போன் மாடல்களும், செல்போன் உதிரிபாகங்களும் இருக்கின்றன. 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும், ‘பேடீஎம்’-ல் மூலம் வாங்குபவர்களுக்கு 40 சதவீதம் ‘கேஷ் பேக்’ சலுகையும் வழங்கப்படுகிறது. ‘ஐ-போன் 6 எஸ்’ செல்போன் சிறப்பு சலுகை விலையிலும் கிடைக்கிறது.

இதேபோல், ஆச்சி மசாலா நிறுவனம் சார்பில் ஊறுகாய், ஹெல்த் மிக்ஸ், பாதாம் டிரிங் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ், தொக்கு வகைகள் சிறப்பு தள்ளுபடி விலையிலும், பைசன் நிறுவனம் சார்பில் புளோர், கிச்சன், பாத்ரூம் கிளனர்கள் சலுகை விலையிலும் கிடைக்கிறது. மேலும் அடையார் ஆனந்தபவன் சார்பில் உணவு வகைகளும் இருக்கின்றன.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் வகைகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களோடு சேர்த்து கண்காட்சியில் ரியல் எஸ்டேட் தொடர்பான அரங்கமும், மோட்டார் சைக்கிள்கள் சுலப தவணை முறையில் வாங்குவதற்கான அரங்கமும் இருக்கிறது.

Next Story