சென்னையில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
சென்னையில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை
வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட சென்னை பெருநகர பகுதி காவலர்கள் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தங்கள் தபால் வாக்குகளை அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட குறிப்பிட்ட பள்ளிகளில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்சென்னை தொகுதிக்கான தபால் வாக்குப்பதிவு நந்தனம் கலைக்கல்லூரியில் காலை 7 மணிக்குப் பதில் 8 மணிக்குத் தொடங்கிய நிலையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கான அதிகாரிகள் வராததால் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகளுடன் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மத்திய சென்னை தொகுதிக்கான தபால் வாக்குப்பதிவும் எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்குத் தொடங்கியது.
Related Tags :
Next Story