130 கோடி மக்களை காக்கக்கூடிய வலிமையான பிரதமர் மோடி தான் - முதல்வர் பழனிசாமி


130 கோடி மக்களை காக்கக்கூடிய வலிமையான பிரதமர் மோடி தான் - முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 13 April 2019 6:20 AM GMT (Updated: 2019-04-13T11:50:24+05:30)

130 கோடி மக்களை காக்கக்கூடிய வலிமையான பிரதமர் மோடி தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தேனி

தேனி ஆண்டிப்பட்டியில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள கரிசல்விலக்கு பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார் பிரதமர் மோடி.

பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு மோடி வந்த போது  மேடையில் முதல்வர், துணை முதல்வர், பொன்.ராதாகிருஷ்ணன், பிரேமலதா உள்ளிட்டோர் இருந்தனர்.

பிரசார கூட்டத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

“சுதந்திரத்திற்கு பிறகு உலகமே போற்றிய பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான்!”. 130 கோடி மக்களை காக்கக்கூடிய வலிமையான பிரதமர் மோடி. ஸ்டாலினை தவிர வேறு யாரும், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. தலையில்லாத உடம்பு போன்று காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது.  தமிழகத்தில் ஒரு மாதிரியும், கேரளாவில் ஒரு மாதிரியும் கம்யூ., கூட்டணி. 

நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது . நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று நாடே எதிர்பார்க்கிறது. செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தவறாக பேசி வருகிறார். தமிழகத்தை பாலைவனமாக்க ஸ்டாலின், ராகுல் முயற்சி செய்கின்றனர்  என கூறினார்

Next Story