மோடியின் கால்களில் விழுந்து ஆசி பெற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்
பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், மோடியின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.
தேனி
தேனி ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள கரிசல்விலக்கு பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமர் மோடி, பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். மேடையில் முதல்வர், துணை முதல்வர், பொன்.ராதாகிருஷ்ணன், பிரேமலதா உள்ளிட்டோர் இருந்தனர்.
பிரசார கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினர்.
பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், மோடியின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.
Related Tags :
Next Story