4 சட்டமன்றதொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மே 19–ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நீண்ட வற்புறுத்தலுக்கு பிறகு அறிவித்துள்ளது.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மே 19–ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நீண்ட வற்புறுத்தலுக்கு பிறகு அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளையும் சேர்த்து 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று மே 23–ந் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
அப்போது, அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்து தி.மு.க. வேட்பாளர்கள் அபரிமிதமான வெற்றி பெறுவார்கள். இதன்மூலம், அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story