இன்று தமிழ் புத்தாண்டு தினம்: கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து
தமிழகத்தின் பாரம்பரியம், பழமை, கலாசாரம் ஆகியவற்றின் மேன்மைகளை கொண்டாடி மகிழும் நாள்தான் தமிழ் புத்தாண்டு தினமாகும்.
சென்னை,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தின் பாரம்பரியம், பழமை, கலாசாரம் ஆகியவற்றின் மேன்மைகளை கொண்டாடி மகிழும் நாள்தான் தமிழ் புத்தாண்டு தினமாகும். ஒழுக்கம், நேர்மை, தைரியம், இரக்கம், கருணை போன்ற மிகச்சிறந்த குணநலன்கள் மூலம் உலகத்துக்கு தங்களை உணர்த்தியவர்கள் தமிழகத்து மக்களாகும்.
இன்று பிறந்துள்ள இந்த புத்தாண்டு முழுவதும் இந்த மாநிலமும், இங்குள்ள மக்களும் ஒளிமயமான எதிர்காலத்தை அடையும் வகையில் நம்பிக்கை, மகிழ்ச்சி நிறைந்து விளங்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story