காலணிகளை சுத்தம் செய்து பிரசாரம்: கைதான பெண்ணை விடுதலை செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அர்ஜூன் சம்பத் தகவல்


காலணிகளை சுத்தம் செய்து பிரசாரம்: கைதான பெண்ணை விடுதலை செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அர்ஜூன் சம்பத் தகவல்
x
தினத்தந்தி 14 April 2019 2:45 AM IST (Updated: 14 April 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் காலணிகளை சுத்தம் செய்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு கைதான பெண்ணை விடுதலை செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

திருச்சி,

இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் முன்பு கடந்த 11-ந் தேதி நர்மதா என்ற பெண், கோவிலுக்கு வந்த பக்தர்களின் காலணிகளை சுத்தம் செய்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக நூதன பிரசாரம் செய்தார். இது அவரவர் உரிமை. அவர் எந்த இடத்திலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை.

விடுதலை செய்ய கோரிக்கை

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில் அவரை கைது செய்து உடனடியாக சிறையில் அடைத்து விட்டார்கள்.

தமிழகத்தில் பல இடங்களில் கோவில் முன்பும், மசூதிகள் முன்பும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகையால் நர்மதா கைது செய்யப்பட்டது எந்த விதத்திலும் நியாயமில்லை. எனவே, உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கும் ஆன்-லைன் மூலம் புகார் அளிக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story