சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம் செய்கிறார்


சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம் செய்கிறார்
x

சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம் செய்கிறார் என தேமுதிக அறிவித்துள்ளது.

2019 தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என அக்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இதற்கிடையே தேமுதிக வெளியிட்ட வீடியோவில், பிரசாரத்திற்கு வருவேன் என்று விஜயகாந்த் பேசியிருந்தார். இப்போது அவர் சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜை ஆதரித்தும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களான அதிமுக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் பாமக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பாலை ஆதரித்தும் நாளை (15.04.2019) மாலை 4 மணிக்கு மூன்று நாடாளுமன்றத் தொகுதியிலும் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story