சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் அமமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்- அமைச்சர் ஜெயக்குமார்


சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் அமமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்- அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 16 April 2019 7:22 AM GMT (Updated: 2019-04-16T12:52:29+05:30)

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் அமமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

அமைச்சர்  ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் அமமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும்.

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார்கள், ஆனால் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படவில்லை.

கமல்ஹாசன் “விளம்பரத்தில் தொலைக்காட்சியை உடைப்பது போன்ற காட்சியின் மூலம் அவர் ஒரு நல்ல நடிகர் என்பதை மட்டும் காட்டுகிறார்" என கூறினார்.

Next Story