யாரை திருப்திப்படுத்த இந்த ரெய்டு - மு.க. ஸ்டாலின் கேள்வி
யாரை திருப்திப்படுத்த தேர்தல் ஆணையம் இந்த ரெய்டு நடவடிக்கை எடுத்து வருகிறது என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin
திருச்சி,
தேர்தல் ஆணையம் யாரை திருப்திப்படுத்துவதற்கு தூத்துக்குடியில் இந்த ரெய்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனினும், குடியாத்தம், ஆம்பூர் இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தை மோடி பயன்படுத்துகிறார். தேர்தலை குலைத்து, திமுக மீது களங்கம் விளைவிக்க மோடி முயல்கிறார். வேலூரில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை.
வேலூர் மக்களவை தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும் திமுக தான் வெற்றி பெறும். தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்களை கொண்டுவர தி.மு.க. தீவிரமாக பணிகளைத் துவங்கும்; தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

Related Tags :
Next Story