சாத்தூரில் அமமுக வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை


சாத்தூரில் அமமுக வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 17 April 2019 6:50 PM IST (Updated: 17 April 2019 7:25 PM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் அமமுக வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சாத்தூர் சட்டசபைத் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு தினகரனின் அமமுக தரப்பில் களமிறக்கப்பட்டுள்ள சுப்பிரமணியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே அவருடைய அலுவலகம், தோட்டத்தில் இருந்து ரூ.43 லட்சம்  பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர்.

நேற்று தேனி மாவட்டம்  ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சியினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில் தொடர்ந்து சோதனை நடக்கிறது. நாளை தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர்த்து 38 நாடாளுமன்றத் தொகுதியிலும், 18 சட்டசபை தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

Next Story