வாக்குப்பதிவையொட்டி பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்


வாக்குப்பதிவையொட்டி பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x
தினத்தந்தி 18 April 2019 7:18 PM IST (Updated: 18 April 2019 7:18 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியை மட்டும் தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 

வாக்குப்பதிவையொட்டி, சென்னை உள்பட வெளியூர்களுக்கு சென்றுள்ள பொதுமக்கள் வசதிக்காக சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு  நாளை முதல் ஏப்.21-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Story