‘ஒரு விரல் புரட்சி’ சமூக வலைத்தளங்களில் இளம் வாக்காளர்கள் ஆர்வம்


‘ஒரு விரல் புரட்சி’ சமூக வலைத்தளங்களில் இளம் வாக்காளர்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 18 April 2019 7:22 PM GMT (Updated: 18 April 2019 7:22 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில், இளம் வாக்காளர்கள் மற்றும் முதன்முறையாக வாக்களிக்க இருந்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் நேற்று வாக்களித்தனர்.

‘ஒரு விரல் புரட்சி’ சமூக வலைத்தளங்களில் இளம் வாக்காளர்கள் ஆர்வம்

நாடாளுமன்ற தேர்தலில், இளம் வாக்காளர்கள் மற்றும் முதன்முறையாக வாக்களிக்க இருந்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் நேற்று வாக்களித்தனர். வாக்களித்த சந்தோஷத்தில் வாக்குச்சாவடி அருகே நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் முதன்முறையாக வாக்களித்தவர்கள் மை தீட்டப்பட்ட தங்கள் விரலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்-புக்’, ‘டுவிட்டர்’, ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘ஒரு விரல் புரட்சி’ எனும் பெயரில் பதிவிட்டு மகிழ்ந்தனர். மேலும் பலரது ‘வாட்ஸ்-அப்’களிலும் நேற்று ஓட்டுப்போடுவதை வலியுறுத்தும் வகையிலான படங்களே முகப்பு காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன.

‘நான் ஓட்டு போட்டுவிட்டேன், நீங்க?’, என்பன போன்ற வாசகங்களையும் நேற்று இளைஞர்கள் வேகவேகமாக சமூக வலைதளங்களில் பரவ செய்தனர். இதுவும் ஒரு வகையில் விழிப்புணர்வாகவே அமைந்தது.

Next Story