சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதி - சவுகிதார் எச்.ராஜா நம்பிக்கை


சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதி - சவுகிதார் எச்.ராஜா நம்பிக்கை
x
தினத்தந்தி 19 April 2019 10:45 AM GMT (Updated: 2019-04-19T16:15:25+05:30)

சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதியென சவுகிதார் எச். ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணி சார்பில் எச். ராஜா களமிறங்கியுள்ளார். காங்கிரஸ் தரப்பில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடுகிறார். இதுபோக அமமுக வேட்பாளரும் களத்தில் உள்ளார். 

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி), ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நாடாளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள மானாமதுரை தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது.  காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 70 சதவீதம் வாக்குப்பதிவானது.

இந்நிலையில் சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதியென சவுகிதார் எச். ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் “சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும், கடுமையாகப் பணியாற்றிய கூட்டணிக் கட்சியினருக்கும், பாஜக தொண்டர்களுக்கும், தேசிய உணர்வாளர்களுக்கும்,  மனமார்ந்த கோடானு கோடி நன்றிகள். சிவகங்கையில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கும் ,ஊழல் பணநாயகத்திற்குமான போட்டியில் வெற்றி உறுதி” என தெரிவித்துள்ளார். 

Next Story