6-ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் தலைவர்கள் அஞ்சலி


6-ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் தலைவர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 19 April 2019 11:00 PM GMT (Updated: 19 April 2019 10:01 PM GMT)

‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6-ம் ஆண்டு நினைவுத்தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை,

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனை படைத்து முத்திரை பதித்தவர் ‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6-ம் ஆண்டு நினைவு நாளான நேற்று சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்குள்ள நினைவு பீடத்தில் அவரது மகனும், ‘தினத்தந்தி’ இயக்குனருமான சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பா.சிவந்தி ஆதித்தனாரின் பேரனும், மாலை மலர் இயக்குனருமான பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மனைவி மாலதி சிவந்தி ஆதித்தன், மூத்த மருமகன் ஜெயராமையா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள். ‘தினத்தந்தி’, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, ராணி பிரிண்டர்ஸ், இந்தியா கேப்ஸ், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என்.டி.வி. ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர் களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் அஞ்சலி செலுத்தியவர்களின் விவரம் வருமாறு:-

அமைச்சர் ஜெயக்குமார்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தேர்தல் பணி துணை செயலாளர் பூங்காநகர் ஆர்.ராமதாஸ், தென் சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மைக்கேல் ராஜ்.

காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், மாநில பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரூபி மனோகரன், எம்.எஸ். திரவியம், வீரபாண்டியன், சிவராஜசேகரன், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நரேஷ்குமார், சூளை ராஜேந்திரன், தியாகராயநகர் பகுதி தலைவர் நாஞ்சிக்குளம் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.அகமது அலி, மகளிர் காங்கிரஸ் நிர்வாகி விஜயா சந்திரன்.

த.மா.கா.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், வர்த்தக அணி மாநிலத்தலைவர் ஆர்.எஸ்.முத்து, மாநில செயலாளர் மால் மருகன்.

பா.ஜனதா

பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா, பா.ஜ.க. விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன்.

தே.மு.தி.க.

தே.மு.தி.க. சார்பில் வர்த்தக அணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன், இளைஞர் அணி தலைவர் நடிகர் ராஜேந்திரபிரசாத்.

அ.தி.மு.க.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ.சி.சேகர், அம்பத்தூர் நகர ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் முகப்பேர் எம்.என். இளஞ்செழியன், வடசென்னை மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளர் ஆர்.எம்.டி.ரவீந்திரஜெயன், தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன், அ.தி.மு.க. நிர்வாகி வேல்ஆதித்தன்.

தி.மு.க.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.பி.பிரபாகர் ராஜா, அ.ம.மு.க. வட சென்னை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தென்சென்னை மாவட்ட செயலாளர் சுகுமார் பாபு, சேப்பாக்கம் எல்.ராஜேந்திரன்.

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநிலத் செய்தி தொடர்பாளர் சந்தானம், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவக்குமார், வக்கீல் அணி தலைவர் மணிவாசகம், மாவட்ட தலைவர் வைகுண்டராஜா, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் அய்யர், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக்கட்சி மாநில இணை பொதுச்செயலாளர் சேதுராமன், நிர்வாகிகள் பழனி, சுதர்சன், செல்வம், தமிழ் மாநில தேசிய லீக் ஜி.சம்சுதீன், தமிழ் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் புகழேந்தி, ராஜா, ஆனந்த். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர்கள் இரா.செல்வம், செல்லத்துரை. சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எம்.ஏ.சேவியர், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பெரம்பூர் பகுதி செயலாளர் கோபி.

நாடார் சங்கம்

சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், செயலாளர் செல்லத்துரை, கல்விக்குழு உறுப்பினர்கள் நாகராஜன், செல்வக்குமார். தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால், ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரன், வடசென்னை மாவட்ட தலைவர் எட்டுராஜ்.

நெல்லை தட்சண மாறா நாடார் சங்க மும்பை கிளை தலைவர் ராமராஜா, நாடார் மக்கள் சக்தி இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தமிழ்நாடு நாடார் சங்க மாநிலத்தலைவர் முத்து ரமேஷ், மாநில அமைப்பு செயலாளர் சக்திகுமார், பொதுச்செயலாளர் கொளத்தூர் பால்ராஜ், பொருளாளர் ஆடிட்டர் சிவராஜ், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொருளாளர் சுந்தரேசன், சென்னை நாடார் நல சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், துணை செயலாளர் மார்க்கெட் ராஜா.

நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன், பொருளாளர் மயிலை எம்.மாரித்தங்கம், செயலாளர் சந்திரசேகரன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் பெரியசாமி, வெள்ளத்துரை, அன்புநாதன், செல்வக்குமார், பிரபாகர்.

சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம், முக்கூடல் நாடார் சங்க தலைவர் புழல் ஜி.நாகராஜன், சென்னை நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சீனிவாசன், செயலாளர் ஏ.டி.கார்த்திக்கேயன், கவுரவ தலைவர் மைக்கேல்ராஜ், நாடார் மகாஜன சபை தலைவர் கே.எஸ்.கார்த்திக்கேயன், சென்னை வாழ் முள்ளக்காடு நாடார் சங்க துணை செயலாளர் முல்லை பிரைட்டன்.

மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவினர் முறை மகமை தருமபண்டு தலைவர் கே.சந்திரமோகன், மணலி நாடார் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் எம்.பாலசுப்பிரமணி, பாண்டிராஜ், கஜேந்திரன், மாடசாமி, சேர்மசாமி, சம்பத். அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ், சென்னை வாழ் இனாம் கரிசல்குளம் நாடார் முன்னேற்ற சங்க இணை செயலாளர் எம்.விஜயகுமார், பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் டி.பி.செல்வராஜ், நிர்வாகிகள் அருணாசல மூர்த்தி, ஜெயராஜ், வெள்ளைசாமி. சென்னை நாடார் இளைஞர் சங்க தலைவர் ராமராஜ், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் சேலம் மாடசாமி,

திருவான்மியூர்

திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் பி.ராஜகோபால், பொதுச்செயலாளர் திருப்புகழ், நிர்வாகிகள் கதிர்வேல், தங்கபாசு, சரவணபவன், மாணிக்க வாசகம், அயனாவரம் மன்ற நிர்வாகிகள் சந்திரசேகர், எம்.விஸ்வநாதன், எல்.பத்மநாபன், அணியாப்பூர் நாடார் சங்க தலைவர் தங்கவேல், பொருளாளர் மனோகரன், பல்லாவரம் நாடார் சங்க தலைவர் எம்.ஜெயபால்.

தென்னிந்திய நாடார் சங்க மாநில இளைஞரணி தலைவர் இ.விஜயகுமார், தமிழ்நாடு இந்து நாடார் பேரவை தலைவர் எல்.கே.ராஜா, பொதுச்செயலாளர் கார்த்திக், பொருளாளர் சங்கர். நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் முத்துராமன், நாடார் சங்க காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் குரு, பெருங்குடி நாடார் சங்கம் போஸ், செந்தூரான், நாடார் மக்கள் மன்ற தலைவர் பரமன்குறிச்சி லோகநாதன், நாடார் இளைஞர் இயக்க தலைவர் வீரமாணிக்கம் சிவா.

சென்னை வாழ் போடுபட்டி நாடார் சங்க நிர்வாகிகள் ஏ.எம்.முனிரத்தினம், செந்தில்குமார், சென்னை வாழ் துறையூர் நாடார் உறவின் முறை தலைவர் ஸ்டாலின், நிர்வாகிகள் தங்கசாமி, என்.கே.கருப்புசாமி.

நற்பணி மன்றம்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில துணை பொதுச்செயலாளர்கள் பால முனியப்பன், ஜெகதீஸ் சவுந்தர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் காயல் இளவரசு, கணேசா, தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், நெல்லை மாவட்ட செயலாளர் எம்.தோப்புமணி, திருவொற்றியூர் நகர தலைவர் டி.முல்லைராஜா, ஆலோசகர் முல்லை தேவராஜ், சென்னை செனாய் நகர் பகுதி தலைவர் பி.கே.சீனிவாசன், சிவகாசி அய்யனார் காலனி மன்ற செயலாளர் ராஜ்குமார், திருத்தணி நகர செயலாளர் எம்.கே.ராமச்சந்திரன், அஸ்வின் கார்த்திக், அணியாப்பூர் தலைவர் ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், காயாமொழி தலைவர் முருகா ஆதித்தன்.

வியாபாரிகள் சங்கம்

தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், கொளத்தூர் தொகுதி செயலாளர் கே.எஸ்.சந்தானம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மண்டல தலைவர் ஜோதிலிங்கம், வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், மணலி சேக்காடு தலைவர் பால்ராஜ், நிதிக்குழு தலைவர் ஸ்டீபன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் த.ரவி, நிர்வாகிகள் சிந்தா, ஜெயராமன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், துணை பொதுச்செயலாளர் கே.எஸ்.எம்.கார்த்திக்கேயன், தமிழ்நாடு பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற அவைத்தலைவர் துரைலிங்கம், தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள் பொன்ராஜ், செல்வ காமராஜ், காளியப்பன், மணலி சிங்கம், சவுந்திரபாண்டியன்.

புத்தூர் கட்டு வைத்தியர் ஆர்.எஸ்.வேலுமணி, சிலம்பு செல்வர் ம.பொ.சி. அறக்கட்டளை நிறுவனர் மாதவி பாஸ்கரன், மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் எஸ்.கந்தராஜ், உடற்பயிற்சியாளர் ஏ.சிதம்பரம், நேஷனல் பவர் ஜிம் நிறுவன பி.சுரேஷ், அகில இந்திய மனித உரிமைகள் கழக தொழிற்சங்க பேரவை நிறுவனர் முத்துராமன், செயல் தலைவர் ராஜேஷ். மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபுரி நிர்வாக தலைவர் பி.தங்கபெருமாள், வக்கீல்கள் இரா.சிவசங்கர், ஸ்ரீதரன். அடையாளம் ராமன், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக நிறுவனத்தலைவர் முத்துராமன் சிங்க பெருமாள், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் சந்தன்ராஜ், தமிழக விழிப்புணர்வு கட்சி நிறுவனத்தலைவர் வெ.தியாகராஜன்.

தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோஷம், சிதம்பரம் டி.சி.ராஜாகுமார், சபேஷ் ஆதித்தன், தண்டுபத்து ஜெயராமன், டாக்டர் கருணாநிதி, ராணி ஜோதிடர் பண்டிதர் பச்சை ராஜன், ஜோதிடர் ஆதித்ய குருஜி, காயல் சதக் அப்துல்லா, ஓய்வுபெற்ற மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் குமாரசாமி ஆதித்தன், புதுப்பேட்டை வணிகர் சங்க மறுமலர்ச்சி பாசறை அமைப்பாளர் எச்.பீர்முகமது, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி என்.மாரிமுத்து, பொதுச்செயலாளர் ஸ்டீபன், பொருளாளர் சமுத்திரபாண்டியன், ஆலோசகர் பால்ராஜ், அமைப்பாளர் கருணாமூர்த்தி, கிராமணி இயக்க பொதுச்செயலாளர் சுப்பிரமணி.

நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் கே.ராஜ்குமார், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தேசிய தலைவர் இசக்கிமுத்து, பனைவாரிய முன்னாள் இயக்குனர் பார்வதி முத்து, விஜய் மக்கள் இயக்க தென்சென்னை மாவட்ட தலைவர் கே.வி.தாமு, ஆதித்தனார் மக்கள் பேரவை தலைவர் செல்வநாதன், பொதுச்செயலாளர் ஆர்.வி.கணேசன், பொருளாளர் ஜெயக்குமார்.

பசுமை தென்றல் இயக்க ஒருங்கிணைப்பாளர் திருவான்மியூர் டி.கே.முரளி, தமிழன்னை கலை மன்ற செயலாளர் தமிழன்னை ரவி, ராக்கெட் ராஜா பாசறை ஆணைகுடி சத்ரியன்பாபு, மருதவேல், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.சி. கடலூர் எல்.ஜெயச்சந்திரன், அரிமா சங்கம் ஜி.மணிலால், நம்ம ஊரு, நம்ம ஆறு தாமிரபணி கூட்டணி தலைவர் டாப்பு ராஜா,

திரைப்பட தயாரிப்பாளர்கள் கே.ராஜன், டி.சிவா, மூத்த வக்கீல் காந்தி, முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. வைகுந்த், நிலத்தரகர்கள் சங்க தலைவர் விருகை வி.என்.கண்ணன், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், ஓய்வுபெற்ற பதிவுத்துறை கூடுதல் தலைவர் ஆ.ஆறுமுக நயினார்.

தமிழ்நாடு கைப்பந்து சங்க நிர்வாகிகள் முருகன், மார்டின் சுதாகர், ஆர்.ஆதித்தன், பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தி னர். டாக்டர் சிவந்தி கைப்பந்து பவுண்டேஷன் செயலாளர் சித்திரைப்பாண்டியன் தலைமையில் விளையாட்டு வீராங்கனைகள் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

Next Story