வாக்களிப்பதை கட்டாயமாக்குவது குறித்து பொது விவாதம் தேர்தல் ஆணையத்துக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
இந்தியாவில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது குறித்து பொது விவாதம் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 38 தொகுதிகளிலும் சராசரியாக 71.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒப்பீட்டளவில் இது மனநிறைவளிக்கும் எண்ணிக்கை தான் என்றாலும் கூட, நான்கில் ஒரு பங்குக்கும் கூடுதலான வாக்காளர்கள் தங்களின் விலைமதிப்பற்ற வாக்குரிமையை செலுத்தத் தவறியதை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாக பார்க்க முடியவில்லை.
இந்தியாவில் மட்டும் தான் இந்த நிலைமை என்றில்லை, உலகின் பல நாடுகளில் இதே நிலைமை தான் காணப்படுகிறது. உலகின் வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்காவில் 1968-ம் ஆண்டுக்குப் பிறகு இன்று வரையிலான 50 ஆண்டுகளில் நடந்த அனைத்து அதிபர் தேர்தல்களிலும் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இங்கிலாந்தில் 1950-ம் ஆண்டுகளில் 85 சதவீதமாக இருந்த சராசரி வாக்குப்பதிவு இப்போது 65 சதவீதமாக குறைந்துவிட்டது.
அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவில் அனைத்து தேர்தல்களிலும் 90 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகள் பதிவாகின்றன. இதற்குக் காரணம் அங்கு தேர்தலில் வாக்களிக்கத் தவறுவது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டு, 20 ஆஸ்திரேலிய டாலர் அபராதம், அரசு வேலைவாய்ப்பு மறுப்பு உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுவது தான்.
இந்திய ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அதற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளில் வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம். இத்தகைய சூழலில் இந்தியாவில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது குறித்த பொது விவாதத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும். அதேநேரத்தில் தேர்தலில் வாக்களிப்பதை சுமையாக கருதாமல் கவுரவமாக நினைக்கும் நிலை உருவாக வேண்டும். அந்த நாள் தான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும் நாளாக அமையும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story