தி.மு.க. ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் இருந்தாரா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
தி.மு.க. ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் இருந்தாரா? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி விடுத்து உள்ளார்.
சென்னை
மே தினத்தை யொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார் கட்சி தலைவர் விஜயகாந்த். இந்த நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் , மற்றும் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்..
பின்னர் பிரமேலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொன்பரப்பியில் சாதி மோதலை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மோதலை தூண்டிவிட்டு யாரும் ஆதாயம் தேடக்கூடாது. 3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் என்றால் சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டத்தான் செய்வார்கள். தி.மு.க. ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் இருந்தாரா?
தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கோமதி மாரிமுத்துவுக்கு வாழ்த்துகள்.
4 சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தே.மு.தி.க. ஆதரவு தெரிவித்து உள்ளது. 4 தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்வேன் அதற்கான தேதியை தே.மு.தி.க. தலைமைக்கழகம் வெளியிடும் என கூறினார்.
Related Tags :
Next Story