மாநில செய்திகள்

மே 23-ம் தேதிக்கு பின் அமமுக, திமுக நினைத்தது எதுவுமே நடக்காது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி + "||" + After May 23, DMK will not do anything

மே 23-ம் தேதிக்கு பின் அமமுக, திமுக நினைத்தது எதுவுமே நடக்காது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

மே 23-ம் தேதிக்கு பின் அமமுக, திமுக நினைத்தது எதுவுமே நடக்காது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மே 23-ம் தேதிக்கு பின் அமமுக, திமுக நினைத்தது எதுவுமே நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி அ.பிரபு, விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வருவதாக சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், 3 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இதன் தொடர்ச்சியாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில், சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

3 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக நடக்கும்போது அவர்கள் மீதான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது. மே 23-ம் தேதிக்கு பின் அமமுக, திமுக நினைத்தது எதுவுமே நடக்காது. 

அதிமுக என்ற பாண்டவர் அணியை சகுனி திமுகவும், துரியோதனன் அமமுகவும் சேர்ந்து ஏதும் செய்ய முடியாது. சகுனியான திமுக சூழ்ச்சி செய்யும். பாண்டவர்களான எங்களுக்கு சூழ்ச்சி செய்யத் தெரியாது. கட்சி , ஆட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடும்போது நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாதது. மே 23 ஆம் தேதிக்கு பிறகு திமுகவும் அமமுகவும் நினைப்பது நிறைவேறாது.

தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் முழுமையான அளவில் உள்ளது. சமூகத்திற்கு நண்பனாக இருப்பதே பத்திரிக்கையின் சிறந்த கடமையாக இருக்க முடியும். உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தையொட்டி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் தொகுதியில் பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
வேலூர் தொகுதியில் பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
2. மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
3. அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையாக உள்ளதை மு.க.ஸ்டாலின் உணர்ந்து இருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையாக உள்ளதை மு.க.ஸ்டாலின் உணர்ந்து இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
4. அரசியல் காழ்ப்புணர்வோடு தி.மு.க. நடத்தும் போராட்டங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தண்ணீர் பற்றாக்குறையை அரசு திறம்பட சமாளித்து வரும் நிலையில், அரசியல் காழ்ப்புணர்வோடு தி.மு.க. நடத்தும் போராட்டங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
5. ஒற்றை தலைமை விவகாரம்: அ.தி.மு.க. உடையும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. உடையும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.