ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் கிரண்பேடி மேல் முறையீடு செய்ய ஒத்துழைக்க மாட்டோம் - நாராயணசாமி
ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் கிரண்பேடி மேல் முறையீடு செய்ய ஒத்துழைக்க மாட்டோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. ஜிஎஸ்டியை கொண்டு வந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளது.
மத்தியில் காங். ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் கிரண்பேடி மேல் முறையீடு செய்ய ஒத்துழைக்க மாட்டோம்.
உயர்நீதிமன்றத்தில் கிரண்பேடி மேல்முறையீடு செய்ய புதுச்சேரி அமைச்சரவை நிதி ஒதுக்காது. ஆளுநராக இல்லாமல் தனி நபராக கிரண்பேடி மேல்முறையீடு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story