ஸ்டாலின் 25 ஆண்டுகளில், இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வரும் தகுதியும் வாய்ப்பும் உள்ளவர் -துரைமுருகன்
திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை என புகழாரம் சூட்டினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்பிக் நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை. 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வரும் தகுதியும் வாய்ப்பும் உள்ளவர் ஸ்டாலின்.
இந்த தேர்தலில் பிரதமர் மோடியா? ராகுலா? என விவாதம் வந்ததற்கு காரணம் ஸ்டாலின் தான். அவர் ராகுல்காந்தி பெயரை குறிப்பிடாவிட்டால் மோடியா? அல்லது வேறுயாராவது என வந்திருக்கும்.
தி.மு.க தலைவர் ஸ்டாலினை தலைகுனிய வைக்கமாட்டோம் என தாய் மீது சத்தியம் செய்து களத்தில் பணியாற்ற வேண்டும். அப்போது தான் சிறப்பாக பணி செய்வீர்கள்.
கட்சியில் உள்ள பூசல்களை தேர்தல் முடியும்வரை மறக்க வேண்டும். தேர்தல் முடிந்தபின்னர் நானே வந்து குரூப் பாலிடிக்ஸை உருவாக்கி தருகிறேன் என கூறினார்.
Related Tags :
Next Story