திமுக ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம், அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதே எங்கள் முதல் பணி -தங்கதமிழ்செல்வன்
திமுக ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம், அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதே எங்கள் முதல் பணி என தங்கதமிழ்செல்வன் கூறினார்.
சென்னை,
அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறியதாவது:-
நாங்கள் இப்போது 22 தொகுதிகளிலும் ஜெயிக்க போகிறோம். திமுகவும் நாங்களும் சேர்ந்தால் தான் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப முடியும். அப்படி வீட்டிற்கு அனுப்பிவிட்டால் திமுக ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம். அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதே எங்கள் முதல் பணி. 22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், இல்லையெனில் திமுக பயந்ததாக அர்த்தம் என கூறினார்.
Related Tags :
Next Story