பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியீடு: முழுவிவரம்


பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியீடு: முழுவிவரம்
x
தினத்தந்தி 8 May 2019 11:14 AM IST (Updated: 8 May 2019 11:14 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் முழுவிவரம் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து 11-ம் வகுப்புக்கான தேர்வு முடிவு இன்று  காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது. 

தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 93.3 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.5 சதவீதமாகவும் உள்ளது. தேர்ச்சி விகிதத்தில் 98 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும், திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், கோவை மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. 

பள்ளிகள் வகைப்பாடு வாரியாக தேர்வு விகிதம் :-

அரசுப்பள்ளிகள் 90.6%
அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.9%
மெட்ரிக் பள்ளிகள் 99.1%
இரு பாலர் பள்ளிகள் -95.1%
பெண்கள் பள்ளிகள் - 96.8%
ஆண்கள் பள்ளிகள் 90.2%

+1 தேர்வு முடிவுகள் - 2019 பாட வாரியாக தேர்ச்சி விகிதம் :-

இயற்பியல் - 94.6%

வேதியியல் - 95.7%

உயிரியல்   - 97.1%

கணிதம்    - 96.9%

தாவரவியல் - 91.1%

விலங்கியல் - 93.0%

கணினி அறிவியல் -98.2%

வணிகவியல்- 97.7%

கணக்குப்பதிவியல் - 97.7%

+1 தேர்வு முடிவுகள் - 2019 மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் :-

ஈரோடு -  98.03%

திருப்பூர் -  97.93%

கோவை -  97.64%

தூத்துக்குடி -  97.64%

திருநெல்வேலி -  97.59%



Next Story