மாதிரி வாக்குப்பதிவில் நடந்த குளறுபடி: 44 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு எண்ணப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மாதிரி வாக்குப்பதிவில் நடந்த குளறுபடியால், தமிழகத்தில் 44 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டு எண்ணப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை,
மாதிரி வாக்குப்பதிவில் நடந்த குளறுபடியால், தமிழகத்தில் 44 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டு எண்ணப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தவறுகள்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந்தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு முன்பு நடக்கும் மாதிரி வாக்குப்பதிவில் பல தவறுகளும், வாக்குப்பதிவின்போது பல தவறுகளும் நடந்தன.
வாக்குப்பதிவின் போது தவறு நடந்த 10 வாக்குச்சாவடிகளை (தர்மபுரி-8, திருவள்ளூர், கடலூர் தலா 1) கண்டறிந்து அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மாநில தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் எழுதினார். அதுபோல் மாதிரி வாக்குப்பதிவில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி தேர்தல் பார்வையாளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினர். அதுபற்றி சத்யபிரத சாகுவிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை பெற்றது.
3 வித தவறுகள்
மாதிரி வாக்குப்பதிவில் 47 வாக்குச்சாவடிகளில் 3 விதமாக நடந்த தவறுகளை சத்யபிரத சாகு சுட்டிக்காட்டினார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு நடக்கும் மாதிரி வாக்குப்பதிவின்போது 50 ஓட்டுகள் போடப்படும். அப்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் அந்த ஓட்டுகள் பதிவாகும். ஒப்புகைச் சீட்டு எந்திரங்களிலும் அதற்கான சீட்டுகள் விழுந்துகிடக்கும்.வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு 2 எந்திரங்களிலும் இருந்து அவை அப்புறப்படுத்தப்பட வேண்டும். மாதிரி ஓட்டுகளை வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்து அழிக்க வேண்டும். ஒப்புகைச் சீட்டுகளை அந்த எந்திரத்தில் இருந்து எடுத்துவிட்டு அவற்றை தனியாக வைத்திருக்க வேண்டும்.
ஆனால் சில வாக்குச்சாவடிகளில் முதன்மை அதிகாரிகள் 3 விதமான தவறுகளை செய்துள்ளனர். ஒன்று, வாக்குப்பதிவு எந்திரத்தில் இருந்து மாதிரி ஓட்டுகளை அழித்தவர்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களில் இருந்து அவற்றை அகற்றாமல் விட்டுவிட்டனர்.
இரண்டு, ஒப்புகைச் சீட்டு எந்திரங்களில் இருந்து அவற்றை அகற்றியவர்கள், வாக்குப்பதிவு எந்திரத்தில் இருந்து மாதிரி ஓட்டுகளை அழிக்காமல் விட்டுவிட்டனர். மூன்று, அந்த இரண்டு எந்திரங்களிலும் இருந்தும் மாதிரி ஓட்டுகளை அவர்கள் அப்புறப்படுத்தவில்லை. இந்தத் தவறுகள் 47 வாக்குச்சாவடிகளில் நடந்தன.
ஒப்புகை சீட்டு எண்ணப்படும்
இவற்றில் ஒப்புகைச் சீட்டு எந்திரங்களில் இருந்து முறையாக சீட்டுகளை அப்புறப்படுத்திய வாக்குச்சாவடிகளை மட்டும் தனியாக வரிசைப்படுத்தினர். அதன் எண்ணிக்கை 44 ஆகும். எனவே அங்கு மட்டும், வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தாமல், ஒப்புகைச் சீட்டுகளை மட்டும் எண்ணும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மற்ற 3 வாக்குச்சாவடிகளிலும் (ஈரோடு, தேனியில் உள்ளவை), சத்யபிரத சாகு பரிந்துரைத்திருந்த 10 வாக்குச்சாவடிகளோடு சேர்த்து, (மொத்தம் 13) மறுவாக்குப்பதிவு நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
அந்த வகையில் வாக்கு எண்ணிக்கையின்போது 44 வாக்குச்சாவடிகளின் ஓட்டுகள், ஒப்புகைச் சீட்டு மூலமாகவே எண்ணப்படும். அங்கு வாக்குப்பதிவு எந்திரம் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டாது.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அந்த 44 வாக்குச்சாவடிகளின் விவரம் வருமாறு:-
எவை, எவை?
சென்னை வடக்கு - பனந்தோப்பு ரெயில்வே காலனி (வாக்குச்சாவடி எண் -40).
காஞ்சீபுரம் - தண்டலம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி (132).
திருப்போரூர் (இடைத் தேர்தல்) - தண்டலம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி (132).
கிருஷ்ணகிரி - டாப்எப்பளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி (103).
கிருஷ்ணகிரி - பஸ்தி நகராட்சி தொடக்கப்பள்ளி (63).
கிருஷ்ணகிரி - எடப்பள்ளி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி (352).
சேலம் - நடுப்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி (52).
சேலம் - இருப்பாளி செவிடனூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி (128).
சேலம் - எடப்பாடி நகராட்சி தொடக்கப்பள்ளி (223).
சேலம் - பூலாவரி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி (161).
பெரம்பலூர் - பூவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி (181).
பெரம்பலூர் - நெட்டவேலம்பட்டி ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி (85).
பெரம்பலூர் - கொடியம்பாளையம் எஸ்.வி.டபுள்யூ. அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி (117).
பெரம்பலூர் - மாவிலிப்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி (198).
கடலூர் - தொரப்பாடி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி (120).
கடலூர் - வரக்கல்பத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி (50).
கடலூர் - கொண்டூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி (61).
கடலூர் - சுத்துகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி (226).
கடலூர் - வடலூர் பார்வதிபுரம் வள்ளலார் குருக்குலம் மேல்நிலைப்பள்ளி (183).
கடலூர் - வடலூர் பார்வதிபுரம் வள்ளலார் குருக்குலம் மேல்நிலைப்பள்ளி (185).
தஞ்சாவூர் - நகராட்சி தொடக்கப்பள்ளி (43).
தஞ்சாவூர் - பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி (269).
தஞ்சாவூர் - புலவராயன்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்லி (37).
தஞ்சாவூர் (இடைத்தேர்தல்) - நகராட்சி தொடக்கப்பள்ளி (43).
தஞ்சாவூர் (இடைத்தேர்தல்) - நகராட்சி தொடக்கப்பள்ளி (183).
தூத்துக்குடி - விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி (193).
விளாத்திகுளம் (இடைத்தேர்தல்) - அரசு மேல்நிலைப்பள்ளி (193).
கன்னியாகுமரி - எடைகோடு அம்பத்துக்காளை எம்.என்.எம்.எச்.எஸ். (64).
கன்னியாகுமரி - எடைகோடு அம்பத்துக்காளை எம்.என்.எம்.எச்.எஸ். (65).
கன்னியாகுமரி - கொல்லிவிளை களியக்காவிளை அரசு நடுநிலைப்பள்ளி (99).
நாகப்பட்டினம் - வேதாரண்யம் வெண்மணி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி (100).
நாகப்பட்டினம் - வேதாரண்யம் தூய அந்தோணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (200).
நாகப்பட்டினம் - பெங்காத்தூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி (80).
நாகப்பட்டினம் - தெற்கு பள்ளியமேடு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி (215).
நாகப்பட்டினம் - குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி (92).
திருவாரூர் (இடைத்தேர்தல்) - குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி (92).
தென்காசி - 114 மற்றும் 315-ம் வாக்குச்சாவடிகள்.
திருநெல்வேலி - 40, 76 (ஆலங்குளம்), 187 (நெல்லை), 180 (அம்பாசமுத்திரம்), 63, 121 (நாங்குநேரி) ஆகிய வாக்குச்சாவடிகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story