எல்லாம் இருந்தும் பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் இன்றைய தமிழக அரசின் நிலை - கமல்ஹாசன் பேட்டி
எல்லாம் இருந்தும் பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் இன்றைய தமிழக அரசின் நிலையாக உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் நோயாளிகள் இறந்த புகார் தொடர்பாக கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் இருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதுபட்டுள்ள தமிழக அரசை சரிசெய்ய முடியாது. எல்லாம் இருந்தும் பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் இன்றைய தமிழக அரசின் நிலையாக உள்ளது.
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை எக்காரணம் கொண்டும் திறக்க கூடாது. மறுவாக்குப்பதிவுக்கான அறிவிப்பு சந்தேகத்தை எழுப்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story