அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும்-சென்னை வானிலை மையம்


அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும்-சென்னை வானிலை மையம்
x
தினத்தந்தி 14 May 2019 3:03 PM IST (Updated: 14 May 2019 3:03 PM IST)
t-max-icont-min-icon

இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறி உள்ளதாவது:-

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  திருச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் . மழை பெய்யாத இடங்களில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு, அனல் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 6 செண்டி மீட்டர், நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 4 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. கோவை, ஈரோடு, திருச்சியிலும் மழை பெய்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.


Next Story