என்னை அரசியலை விட்டு விலகச்சொல்ல யாருக்கும் உரிமை இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்


என்னை அரசியலை விட்டு விலகச்சொல்ல யாருக்கும் உரிமை இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்
x
தினத்தந்தி 14 May 2019 2:11 PM GMT (Updated: 14 May 2019 2:11 PM GMT)

என்னை அரசியலை விட்டு விலகச்சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பதவி பசி காரணமாக பா.ஜ.க.வுடன் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார்.

மு.க. ஸ்டாலின் தான் குழப்பத்தில் உள்ளார்.  பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.  பா.ஜ.க. வெற்றி பெறும் என்பது தெரிந்துதான் எங்களிடம் பேசி வருகிறார். தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தப்படுவது வாடிக்கைதான் என்றார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், பா.ஜ.க.வுடன் நான் பேசினேன் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.
 
அப்படி நிரூபிக்க தவறினால் தமிழிசை சவுந்ததரராஜன், மோடி ஆகியோர் அரசியலை விட்டு விலக தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- 

எப்போது வேண்டுமானாலும் நிரூபிப்பேன், அரசியலில் எந்த நேரத்தில் நிரூபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன்.

மு.க. ஸ்டாலின் சொல்கிறார் என்பதற்காக இன்றைக்கே நிரூபிக்க வேண்டியதில்லை. பொய் சொல்லாத, ஊழல் செய்யாத, நேர்மையான அரசியலே எனது அரசியல் பாரம்பரியம். என்னுடைய அரசியல் வாழ்க்கை என்றும் நேர்மையானது தான். பாஜகவுடன் தி.மு.க. பேசியதாக எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன்.

என்னை அரசியலை விட்டு விலகச்சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க.வுடன் தி.மு.க. பேசியது என நான் கூறியது உண்மை தான். 

நான் சொல்வதில் எப்போதுமே உண்மை இல்லாமல் இருக்காது. மு.க.ஸ்டாலின் அரசியலில் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை. நான் கூறியது உண்மையா இல்லையா என்பதை மு.க. ஸ்டாலின் நிரூபிக்கட்டும் என்றார்.

Next Story