அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்


அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 May 2019 6:50 PM GMT (Updated: 2019-05-15T00:20:06+05:30)

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் நாக்கை அறுக்கவேண்டும் என்று கூறியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

சென்னை, 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்ட விரோதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் நாக்கை அறுக்கவேண்டும் என்று கூறியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும், பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி துறை அமைச்சராகவும் இருக்கும் ராஜேந்திர பாலாஜி தன் பதவி பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்துகொண்டதற்காக, அவர் வகிக்கும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story