முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
முன் ஜாமீன் கோரி கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு, மதுரை ஐகோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
மதுரை,
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசியதாக அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வக்கீல் விஜயன் நேற்று மதுரை ஐகோர்ட்டில், நீதிபதி புகழேந்தி முன்பு கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதிபதி, போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு தடை விதிப்பது தொடர்பான மனுக்களை விடுமுறை கால கோர்ட்டில் விசாரிக்க முடியாது. தேவைப்பட்டால் மனுதாரர் அந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார்.
முன்ஜாமீன் மனு
அதனைத் தொடர்ந்து நேற்று மாலை கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் கேட்டு அவர் தரப்பு வக்கீல்கள் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனு இன்று (வியாழக் கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.
Related Tags :
Next Story