திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல்: தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.
மதுரை,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 297 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் மதுரை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.
மதுரை மாவட்ட காவல் துறையை சேர்ந்த 126 காவலர்கள், மாநகர காவல்துறையில் பணியாற்றும் 123 காவலர்கள் என மொத்தம் 249 பேர் வாக்களிக்க உள்ளனர்.
Related Tags :
Next Story