"ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்" - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தை முன்கூட்டியே முடித்துக்கொள்ள சொல்லி தேர்தல் ஆணையம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் டுவிட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், ஆளுங்கட்சியின் தேர்தல் விதிமீறல்களை ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக வழக்கமாக, தமிழ்நாட்டில் பெரியார் சிலைகளை உடைப்பதைப்போல, மேற்கு வங்கத்தில் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்துள்ளது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
Ban on campaign in nine constituencies in #WestBengal. The EC has one set of rules for the Opposition and another for the ruling party. Highly condemnable.
— M.K.Stalin (@mkstalin) 16 May 2019
The BJP follows a typical pattern. Vandalises Periyar statue in Tamil Nadu and Iswara Chandra Vidyasagar in West Bengal.
Related Tags :
Next Story