கமல்ஹாசனுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம்
சுதந்திரத்துக்கு பின் முதல் தீவிரவாதி இந்து என கமல்ஹாசன் கூறியது கண்டிக்கத்தக்கது என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சடகோப ராமானுஜ ஜீயர் கூறியதாவது:-
சுதந்திரத்துக்கு பின் முதல் தீவிரவாதி இந்து என கமல்ஹாசன் கூறியுள்ளார். அவர் பேசியது கண்டிக்கத்தக்கது. எங்கு பார்த்தாலும் இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் இதுபோல் அதிகமாக பேசி வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் தட்டிக்கேட்க வேண்டும் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து இந்து மக்களும் ஒன்று சேர வேண்டும். முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் பேசியுள்ளது உலகத்தில் உள்ள அனைத்து இந்து மக்களையும் சொல்வதைப்போல் உள்ளது. கமல்ஹாசன் மேடையில் பேசும்போது எப்படி பேசுகிறோம் என உணர்ந்து பேச வேண்டும். இந்து மக்கள் அனைவரும் விழித்தெழுந்து இதுபோல் பேசுபவர்களை பேசவிடாமல் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story