மாநில செய்திகள்

அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -மு.க.ஸ்டாலின் + "||" + In Aravakurichi Government Arts College Action will be taken - MK Stalin

அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -மு.க.ஸ்டாலின்

அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -மு.க.ஸ்டாலின்
அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துளளார்.
கரூர்

அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தடா கோவில், வாவிகிணம், சின்னதாராபுரம், தென்னிலை, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். 

அப்போது மு.க.ஸ்டாலின்  பேசியதாவது;-

திமுக தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக, எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருகிறார், ஆனால் 23ம் தேதிக்கு பின்னர் அதிமுக ஆட்சி தானாக கவிழும்.

அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க முயற்சி எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார். அரவக்குறிச்சி ஈசநத்தம் பகுதிகளில் விளையும் முருங்கை உள்ளிட்ட விளைபொருட்களுக்கு குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

அரவக்குறிச்சி தொகுதியில் வீட்டுமனை இல்லாத 25 ஆயிரம் பேருக்கு இலவசமாக தலா 3 சென்ட் நிலம் வழங்கப்படும்.  திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ள திட்டம் தொலைநோக்கு பார்வையுடையது என்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தமிழகம்!
நாங்குநேரி எம்.எல்.ஏவாக உள்ள வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
2. சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டப்பிடாரத்தில் தி.மு.க. வெற்றி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது.
3. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அபார வெற்றி
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
4. கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை -10 சுற்றுகள் விவரம்
கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை பெற்றுள்ளார். 10 சுற்றுகள் விவரம் வெளியாகி உள்ளது.
5. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வலிமை காட்டிய பா.ஜ.க.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வெற்றி பெற்று தனது வலிமையை பா.ஜ.க. காட்டியுள்ளது.