தேனி: குச்சனூர் கோயில் கல்வெட்டில் துணை முதலமைச்சர் மகன் ரவீந்திரநாத்தின் பெயர் மறைப்பு
தேனி மாவட்டம் குச்சனூர் கோயில் கல்வெட்டில் இடம்பெற்ற துணை முதலமைச்சர் மகன் ரவீந்திரநாத்தின் பெயர் மறைக்கப்பட்டது.
சென்னை,
தேனி மாவட்டம் குச்சனூர் காசி அன்னபூரணி கோயிலுக்கு நன்கொடை வழங்கியோர் கல்வெட்டில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை எம்.பி என்று குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏறபடுத்தியது. இதனையடுத்து அந்த கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் பெயர் மறைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிப்புக்கு முன்பே எம்.பி என பொறிக்கப்பட்டது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்தல் முடிவு வரும் முன்பே கல்வெட்டில் ரவீந்திரநாத் பெயரில் எம்.பி. என சேர்க்கப்பட்டதால் சர்ச்சை எழுந்ததையொட்டி குச்சனூர் கோயில் கல்வெட்டில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் பெயர் மறைக்கப்பட்டது.
Related Tags :
Next Story