ரெயில் பயணிகளிடம் கொள்ளை: மலேசியாவில் ஓட்டல் வாங்கிய பலே திருடன் கைது
ரெயில் பயணிகளிடம் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை,
ரெயில் பயணிகளிடம் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த சாகுல் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 110 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ரெயில்களில் 4 ஆண்டுகளாக திருடிய சாகுல் ஹமீது, அந்த பணத்தை கொண்டு மலேசியாவில் ஓட்டல் ஒன்றும் வாங்கியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரெயில் பயணிகள் தாங்கள் எடுத்துச்செல்லும் பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ரெயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
Related Tags :
Next Story