ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னொரு செருப்பும் வரும் - கமல்ஹாசன் பேச்சு
ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னொரு செருப்பும் வரும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
சென்னை,
சென்னையில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் பேசியதாவது:-
நான் காந்தியின் ரசிகன் ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னொரு செருப்பும் வரும், எனக்கு அந்த அருகதை உண்டு. ஒரு முறை செருப்பு தவறி விழுந்ததால் தனது மற்றொரு செருப்பையும் கழற்றி வீசினார் காந்தி.
ஒரு செருப்பு வந்து விட்டது. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன். என் மீது செருப்பு வீசியவருக்கு தான் அவமானமே தவிர எனக்கு அல்ல. வாழ்த்துக்கள் வளர்க்கும் அளவுக்கு தன்னம்பிக்கை நம்மை வளர்க்காது.
தன் மீது செருப்பு வீசப்பட்டதையும், காந்தியின் வரலாற்று நிகழ்வையும் சுட்டிக்காட்டி கமல்ஹாசன் பேசினார்.
Related Tags :
Next Story