பைக் செல்ல வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவர் கொலை


பைக் செல்ல வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவர் கொலை
x
தினத்தந்தி 20 May 2019 3:15 PM IST (Updated: 20 May 2019 3:15 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அருகே குரோம்பேட்டையில் பைக் செல்ல வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை குரோம்பேட்டை நாகல்கேணியை சேர்ந்த பள்ளி மாணவர் விக்னேஷ் தனது நண்பருடன் கடந்த வெள்ளியன்று பைக்கில் சென்றுள்ளார். அவர்கள் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டு இருந்தபோது பைக்குக்கு வழிவிடுவது தொடர்பாக அவர்களுக்கும் பம்மல் நகர பாஜக பிரமுகர் மதன் மற்றும் அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மதன் தன்னிடமிருந்த கத்தியால் மாணவர்கள் விக்னேஷ் மற்றும் அவரது நண்பரை தாக்கி உள்ளார்.

இதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் மதன் மற்றும் நித்தியானந்தம் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story