சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தேச துரோக வழக்கு விசாரணைக்காக வைகோ ஆஜர்
தேச துரோக வழக்கு விசாரணைக்காக வைகோ சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணையை நீதிபதி வரும் 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
சென்னை,
சென்னையில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக, ஆயிரம் விளக்கு போலீசார், வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 52 நாட்கள் சிறையில் இருந்த அவர், ஜாமீன் வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். அந்த மனுவை ஏற்று நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஏற்கனவே மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவு முடிந்து சாட்சி விசாரணை தொடங்க இருந்த நிலையில், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார். தொடர்ந்து விசாரணை நடந்தது. ஒரு சில அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 27-ந்தேதிக்கு (திங்கட்கிழமை) நீதிபதி ஒத்திவைத்தார்.
தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி வைகோ நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டார். மீண்டும் விசாரணைக்காக வரும் 27-ந்தேதி வைகோ ஆஜராவார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னர் நிதிமன்றத்துக்கு வெளியே வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பல நேரங்களில் மாறுபட்டு இருந்திருக்கிறது. அதனால் தற்போது வெளியாகி உள்ள கருத்து கணிப்பு குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் 3 நாட்கள் இருப்பதால் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும். பல நேரங்களில் கருத்து கணிப்புகள் அப்படியே நடந்துவிடாது. 2004-ம் ஆண்டு கருத்து கணிப்புப்படி தேர்தல் முடிவுகள் அமையவில்லை. தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும். 5 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை பிரதமர் நரேந்திரமோடி சந்திக்கவில்லை. கடைசியாக அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோதும் அமித்ஷாவை பதில் கூற சொல்லிவிட்டார். 200-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான வேலையை வேதாந்தா நிறுவனம் தொடங்கி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. இதனை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story