கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விரைவில் நவீன சி.சி.டி.வி. -வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் தகவல்


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விரைவில் நவீன சி.சி.டி.வி. -வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 21 May 2019 3:13 PM IST (Updated: 21 May 2019 3:45 PM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்து, வடக்கு கூடுதல் காவல் ஆணையர் தினகரன் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்கனவே  பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல் திறன் குறித்து ஆய்வு செய்த ஆணையர், மேலும் எந்தெந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள்  பொருத்தப்பட வேண்டிய தேவை உள்ளது என்பது குறித்தும், தொழில்நுட்ப  வல்லுநர்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், விரைவில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும், தற்போது உள்ள கேமராக்களை விட நவீன வசதிகள் உள்ள கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவித்தார்.

Next Story