கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதியை 2 வாரம் தள்ளி வைக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை
கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதியை 2 வாரம் தள்ளி வைக்க வேண்டுமென ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர புதிய பாடத்திட்டங்கள் வெளியிட்டுள்ளதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி உள்ளது.
இந்த வெயிலுடன் சேர்த்து அனல் காற்றும் வீசுவதால் பெரியவர்களாலேயே வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறக்கும் தேதியை 2 வாரங்கள் அல்லது வெயிலின் தாக்கம் குறையும் வரை தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story