தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 May 2019 2:44 PM GMT (Updated: 2019-05-22T20:14:02+05:30)

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டைவிட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன்  கூடிய லேசான மழையை எதிர்பார்க்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story